கோனால் புயல் - தென்கிழக்கு இங்கிலாந்தில் போக்குவரத்துக்கு பாதிப்பு
#Climate
#England
#Strom
Prasu
1 week ago
கோனால் புயல் தென்கிழக்கு இங்கிலாந்தின் சில பகுதிகளில் கனமழையை பெய்து வருவதுடன், சில பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
இங்கிலாந்தின் தெற்கு பகுதியில் நிலைக்கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நாட்டின் ஒரு சில பகுதிகளில் 50 மில்லிமீற்றர் வரை மழை பெய்யக்கூடும் என முன்னுரைக்கப்பட்டுள்ளது.
முக்கிய ரயில் சேவைகள் தடைப்பட்டுள்ளதுடன், பயண தாமதங்கள் ஏற்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
சில வழித்தடங்களில் கடும் இடையூறு ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளதுடன், நெட்வொர்க்கின் சில பகுதிகளில் பயணிக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.