பிரித்தானியாவின் பர்மிங்காம் பகுதியில் நடந்த துப்பாக்கி சூட்டில் 20 வயது இளைஞன் மரணம்
#Death
#GunShoot
#England
Prasu
11 months ago
பிரித்தானியாவின் பர்மிங்காம் பகுதியில் நடந்த துப்பாக்கி சூட்டில் நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
பிரித்தானியாவின் பர்மிங்காம் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு நடந்த துப்பாக்கிச் சூடு தாக்குதல் ஒருவர் கொல்லப்பட்டு இருப்பதுடன், மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார்.
இந்த சம்பவத்தில் சந்தேகத்திற்குரிய நபர் ஒருவர் கொலை குற்றச்சாட்டின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
Edgbaston-இல் உள்ள Rotton Park Road-ல் துப்பாக்கிச் சூடு நடந்ததாக கிடைத்த தகவலின் பேரில் West Midlands காவல்துறை அழைக்கப்பட்டது.
இதையடுத்து காவல்துறையினர் கார் ஒன்றில் 20 வயதுடைய ஒருவரை உயிரிழந்த நிலையில் கண்டெடுத்தனர்.
மேலும் 30 வயதுடைய நபர் ஒருவர் பேருந்து நிறுத்தத்தில் காயமடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டு தற்போது கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.