கல்வித்துறை செயலாளராக கோடீஸ்வர மல்யுத்த பெண்ணை பரிந்துரைத்த டொனால்டு டிரம்ப்

#America #education #Trump #Secretary
Prasu
1 year ago
கல்வித்துறை செயலாளராக கோடீஸ்வர மல்யுத்த பெண்ணை பரிந்துரைத்த டொனால்டு டிரம்ப்

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். தற்போது ஜோ பைடன் அரசு அமைதியான முறையில் அதிகாரத்தை மாற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

இதற்கிடையே ஒவ்வாரு துறைக்கும் அதிகாரிகளை நியமித்து வருகிறார் டொனால்டு டிரம்ப்.

இந்த நிலையில் கல்வித்துறை செயலாளராக கோடீஸ்வர மல்யுத்த பெண்மணி லிண்டா மெக்மஹோனை பரிந்துரை செய்துள்ளார். மெக்மஹோன் கடந்த டொனால்டு டிரம்ப் ஆட்சி காலத்தில் 2017 முதல் 2019 வரை சிறு வணிக நிர்வாகத்தை வழிநடத்தினார்.

இரண்டு முறை குடியரசு கட்சி சார்பில் கனெக்கடிகட்ல் இருந்து செனட்டிற்கு போட்டியிட்டு தோல்வியடைந்தார். 2009-ல் இருந்து கனெக்டிக்கட் கல்வி வாரியத்தில் பல வருடங்கள் பணிபுரிந்துள்ளார்.

பல்கலைக்கழக அறக்கட்டளை குழுவிழும் பணியாற்றியுள்ளார். டிரம்ப் அகற்றுவதாக உறுதியளித்த அமைப்பின் துறையின் தலைமை பொறுப்பை ஏற்க உள்ளார்.

 அமெரிக்காவின் கல்வித்துறை செயலாளராக பரிந்துரை செய்யப்பட்டாலும், கல்வி வட்டாரங்களில் தெரியாத முகமாகவே காணப்படுகிறார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4