நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றிய இலங்கை

#SriLanka #Newzealand #Cricket
Prasu
11 months ago
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றிய இலங்கை

நியூசிலாந்து அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது. 

முதலில் நடந்த டி20 தொடர் 1-1 என சமனில் முடிந்தது. இரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் கடந்த 13-ம் தேதி தொடங்கியது . 

முதல் ஒருநாள் போட்டியில் 45 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியால் ஒருநாள் தொடரில் 1-0 என இலங்கை முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி பல்லேகலேவில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் சரித் அசலங்கா பந்துவீச்சை தேர்வு செய்தார். 

மழை காரணமாக போட்டி 47 ஓவர்களாக குறைக்கப்பட்டது. அதன்படி, முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 45.1 ஓவரில் 209 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. மார்க் சாப்மேன் 76 ரன்களும், மிட்ச் ஹே 49 ரன்களும் எடுத்தனர்.

இலங்கை சார்பில் வாண்டர்சே, தீக்சனா தலா 3 விக்கெட்டும், அசிதா பெர்னாண்டோ 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து, 210 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. 

அந்த அணியின் குசால் மெண்டிஸ் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்தார். அவர் இறுதிவரை போராடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். பதும் நிசங்கா 28 ரன்னும், ஜனித் லியாங்கே 22 ரன்னும் எடுத்தனர்.

இறுதியில், இலங்கை அணி 7 விக்கெட்டுக்கு 210 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. குசால் மெண்டிஸ் 74 ரன்னும், தீக்சனா 27 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

 இதன்மூலம் இலங்கை அணி ஒருநாள் தொடரை 2-0 என கைப்பற்றியுள்ளது. நியூசிலாந்தின் பிரேஸ்வெல் 4 விக்கெட் வீழ்த்தினார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!