கனடாவில் அரசாங்க நிறுவனங்களில் அதிகரிக்கும் இனவாத செயல்பாடுகள்

#Canada #people #company
Prasu
4 weeks ago
கனடாவில் அரசாங்க நிறுவனங்களில் அதிகரிக்கும் இனவாத செயல்பாடுகள்

கனடாவில் அரசாங்க நிறுவனங்களில் இனவாத செயல்பாடுகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த இனவாத செயற்பாடுகளினால் சித்திரவதைகள், துஷ்பிரயோகங்கள் தற்கொலைகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக கறுப்பின சமூகத்தினர் மீது இவ்வாறான அடக்குமுறைகள், இனக்ரோத செயற்பாடுகள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. கறுப்பின சமூகத்தைச் சேர்ந்த உயர் பதவிகளை வகிப்பவர்கள் மீது திட்டமிட்ட அடிப்படையில் துன்புறுத்தல்கள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

கனடாவின் அரசாங்க நிறுவனங்களில் பணியாற்றி வரும் மற்றும் பணியாற்றிய கறுப்பின உயர் அதிகாரிகளிடம் தகவல்கள் திரட்டப்பட்டு இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

கறுப்பினத்தவர்கள் நிறுவன மட்டத்தில் செய்யும் தவறு தவறுகளுக்கு மன்னிப்பு வழங்கப்படுவதில்லை என தெரிவிக்கப்படுகிறது. சிறிய தவறு இழைத்தாலும் அவர்களுக்கு அதிக தண்டனை வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

தலைமைத்துவ பதவிகளை வகிக்கும் கறுப்பின பெண்களும் அதிக அளவில் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

 பல்வேறு வழிகளில் துன்புறுத்தப்படுவதாகவும், பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!