நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி கப்பம் பெற்ற நபர் கைது!

#SriLanka
Thamilini
1 year ago
நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி  கப்பம் பெற்ற நபர் கைது!

சமூக ஊடகங்கள் ஊடாக தொடர்பு கொண்டு நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் பரப்புவதாக கூறிய சந்தேக நபர் ஒருவரை கணினி குற்ற புலனாய்வு வடமேற்கு மாகாண பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

 சமூக வலைத்தளங்கள் ஊடாக ஆண் ஒருவரை தொடர்பு கொண்டு நிர்வாண புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை எடுத்து அந்த புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை இணையத்தில் வெளியிட்டு குறித்த நபர் 7 இலட்சம் ரூபா ரொக்கத்தை பெற்றுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் நேற்று (05) தெஹிவளை பொலிஸ் பிரிவில் உள்ள கவுன்சில் அவென்யூவில் கணினி குற்றப் புலனாய்வு வடமேற்கு மாகாணப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். 

 கைது செய்யப்பட்ட சந்தேக நபர் துல்ஹிரிய பிரதேசத்தை சேர்ந்த 20 வயதுடையவராவார்.  வடமேற்கு மாகாண கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
சிறப்பு கட்டுரை