பிரித்தானியாவின் மிகப்பெரிய பாதுகாப்பு நிறுவனத்தில் பாரிய தீ விபத்து!
#SriLanka
Dhushanthini K
6 days ago
பிரித்தானியாவின் மிகப்பெரிய பாதுகாப்பு நிறுவனத்தில் பாரிய தீவிபத்து ஏற்பட்டுள்ளது.பிஏஈ சிஸ்டம்ஸ் என்ற நிறுவனத்தின் பகுதியொன்றில் பாரிய தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
ஐரோப்பாவின் மிகப்பெரிய பாதுகாப்பு நிறுவனங்களில் ஒன்று பிஏஈசிஸ்டம்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரிட்டனின் பரோ இன் பேர்னெஸ் என்ற பகுதியில் அமைந்துள்ள இந்த நிறுவனத்தில் பிரிட்டனிற்கான நீர்மூழ்கிகள் உருவாக்கப்படுகின்றன.
அணுக்கசிவு ஆபத்தில்லை என அறிவித்துள்ள பொலிஸார் எனினும் அப்பகுதியில் வசிக்கும் மக்களை வீடுகளிற்குள் இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். புகையை சுவாசித்த இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.