சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து வெளியேறிய சூப்பர் ஸ்டார்

#Actor #Hospital #rajini kanth
Prasu
1 year ago
சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து வெளியேறிய சூப்பர் ஸ்டார்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த மாதம் 30-ந்தேதி சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

அவருக்கு பரிசோதனை செய்தபோது இதயத்தில் இருந்து ரத்தத்தை உடலின் பிற பகுதிகளுக்கு எடுத்துச் செல்லும் மகா தமனியில் ('அயோர்டா') அவருக்கு வீக்கம் இருந்தது கண்டறியப்பட்டது.

அதன்படி, முதுநிலை இதய இடையீட்டு சிகிச்சை நிபுணர் டாக்டர் சாய் சதீஷ் தலைமையிலான குழுவினர், மகா தமனி வீக்கத்தை முற்றிலும் சரிசெய்யும் வகையில் 'ஸ்டென்ட்' -ஐ அந்த இடத்தில் பொருத்தி உள்ளனர்.

அதனைத் தொடர்ந்து ஐசியூ-வில் வைத்து கண்காணிக்கப்பட்டார். பின்னர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார்.

உடல்நிலை குணமாகி நேற்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

 அதன்பின் இன்று டிஸ்சார்ஜ் ஆவார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று காலை மருத்தவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!