வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தின் பொதுமக்கள் தினமாக திங்கட்கிழமை மாற்றம்!
#SriLanka
#NorthernProvince
#Governor
Mayoorikka
1 year ago
வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தின் பொதுமக்கள் தினமாக எதிர்வரும் திங்கட்கிழமை 07 ஆம் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆளுநருடன் பொதுமக்கள் தங்களுடைய பிரச்சினைகளை நேரடியாக அலுவலக நேரங்களில் கலந்துரையாடுவதற்காக ஏற்கனவே பொது மக்கள் தினமாக இருந்த புதன்கிழமைக்கு பதிலாக திங்கட்கிழமையினை பொதுமக்கள் தினமாக மாற்றப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர் செயலகத்தினால் பொது மக்களுக்கு அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.