பாரிஸில் இன்று முதல் வாகன தரிப்பிட கட்டணம் அதிகரிப்பு
#France
#vehicle
Prasu
11 months ago

இன்று ஒக்டோபர் 1 ஆம் திகதி முதல் தலைநகர் பரிசில் சில வாகனங்களுக்கு தரிப்பிடக்கட்டணங்கள் அதிகரிக்கப்படுகின்றன.
SUV வாகனங்களுக்கு மட்டும் இந்த தரிப்பிடக்கட்டணம் அதிகரிக்கப்பட உள்ளது. கிட்டத்தட்ட மும்மடங்காக இன்று முதல் கட்டணம் உயர்வடைகிறது.
எவ்வாறாயினும் இரண்டு தொன் எடைக்கு கீழே உள்ள மின்சாரம் மற்றும் எரிபொருளில் இயங்கும் 'ஹைபிரிட்' SUV வாகனங்களுக்கு இந்த கட்டண உயர்வு பொருந்தாது.
புதிய கட்டணங்களின் படி, ஒரு மணிநேரத்துக்கு €18 யூரோக்கள் அறவிடப்படும் எனவும், பரிசின் புறநகரங்களுக்கு ஒருமணிநேரத்துக்கு €12 யூரோக்களும் அறவிடப்படும்.



