அனுரவுடன் தொடர்ந்து பயணிப்பதற்கு தயார்: சர்வதேச நாணய நிதியம்
#SriLanka
#IMF
#AnuraKumaraDissanayake
Mayoorikka
1 year ago
சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு வாழ்த்து தெரிவித்து கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
தற்போது செயற்படுத்தப்படும் சர்வதேச நாணய நிதிய வேலைத்திட்டம் உள்ளிட்ட இலங்கையின் அபிவிருத்தி மற்றும் மறுசீரமைப்பு இலக்குகளை அடைவதற்கு நிலையான பங்காளியாக தொடர்ந்து பணியாற்றுவதற்கு சர்வதேச நாணய நிதியம் தயாராக இருப்பதாக அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.