மத்திய வங்கி ஆளுநரை சந்தித்த ஜனாதிபதி - முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடல்!
#SriLanka
#sri lanka tamil news
Thamilini
1 year ago
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிற்கும் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவிற்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த கலந்துரையாடலில் நிதி அமைச்சின் செயலாளர் மகிந்த சிறிவர்தனவும் கலந்துகொண்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (24) பிற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலில் நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.
அத்துடன், பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் நடவடிக்கைகள் மற்றும் நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கும் பல விடயங்கள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.