நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்க அனுரவுடன் கைக்கோர்க்கும் நாமல்!

#SriLanka #sri lanka tamil news #srilankan politics
Thamilini
1 year ago
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்க அனுரவுடன் கைக்கோர்க்கும் நாமல்!

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்கி தேர்தல் முறைமையை மாற்றியமைக்க தேசிய மக்கள் சக்தி முன்வந்தால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முழு ஆதரவையும் வழங்கும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

1994ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரை அனைத்து ஜனாதிபதிகளும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதாக கூறிய போதிலும், எவரும் அவ்வாறு செய்யவில்லை எனவும் அவர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கான சிறந்த தருணம் இதுவாகும்.

எனவே நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிக்க வேண்டிய தேவை இருந்தால் தாமதிக்க வேண்டாம் என நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!