புதிய ஜனாதிபதிக்கு சீன ஜனாதிபதி வாழ்த்து

#SriLanka #China
Mayoorikka
1 year ago
புதிய ஜனாதிபதிக்கு சீன ஜனாதிபதி வாழ்த்து

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட அநுர குமார திசாநாயக்கவிற்கு சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 சீனாவும் இலங்கையும் பாரம்பரிய நட்புறவு கொண்ட அண்டை நாடுகள் என சீன ஜனாதிபதி தனது வாழ்த்துச் செய்தியின் மூலம் சுட்டிக்காட்டியுள்ளார்.

 67 ஆண்டுகளுக்கு முன்னர் சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையில் இராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்டதிலிருந்து, இரு நாடுகளும் எப்போதும் ஒருவரையொருவர் புரிந்துகொண்டு ஆதரவளித்து, நட்பு சகவாழ்வு மற்றும் பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்புக்கு முன்மாதிரியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

 சீன-இலங்கை உறவுகளை மேம்படுத்துவதில் அதிக முக்கியத்துவம் கொடுப்பதாகவும், பாரம்பரிய நட்புறவைப் பேணுவதற்கும் அரசியல் பரஸ்பர நம்பிக்கையை மேம்படுத்துவதற்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாகவும் சீன ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!