மாளிகாவத்தை பகுதியில் துப்பாக்கிச்சூடு - ஒருவர் படுகாயம்!
#SriLanka
#sri lanka tamil news
Thamilini
1 year ago
மாளிகாவத்தை, ஸ்ரீ சதர்ம மாவத்தை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
நேற்றிரவு (22.09) மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர் ஒருவரே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வீட்டின் முன் நின்றிருந்த நபர் ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்டு தப்பிச் சென்றதுடன், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டில் மாலகவத்தை பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய நபரே காயமடைந்துள்ளதுடன், அவர் தெஹிவளை சோல் பீச் ஹோட்டலின் உரிமையாளர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில், அவர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை மாளிகாவத்தை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.