இலங்கை பிரதமராக பதவியேற்கவுள்ள பெண்மணி?
#SriLanka
#PrimeMinister
#Women
Prasu
1 year ago
ஜனாதிபதியாக அனுர குமார திஸாநாயக்க பதவியேற்றதன் பின்னர், பல்கலைக்கழக விரிவுரையாளர் ஹரினி அமரசூரிய நாட்டின் பிரதமராக பதவியேற்கலாம் என நம்பத்தகுந்த அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியக்கூடியதாக உள்ளது.
ஹரிணி அமரசூரிய இலங்கையின் கல்வியாளர், அரசியல் சமூக செயற்பாட்டாளர், பல்கலைக்கழக விரிவுரையாளர் மற்றும் அரசியல்வாதி ஆவார்.
தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராகப் இருக்கும் ஹரிணி அமரசூரிய , இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் சமூக கற்கைகள் பிரிவில் சிரேஷ்ட விரிவுரையாளராகவும் பணியாற்றியுள்ளார்.
54 வயதுடைய இவர் எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் கற்றவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.