ஆபத்தில் இருந்த இலங்கையை காப்பாற்றிய ரணில் விடைபெறுகிறார்!

#SriLanka #Ranil wickremesinghe
Mayoorikka
10 months ago
ஆபத்தில் இருந்த இலங்கையை காப்பாற்றிய ரணில் விடைபெறுகிறார்!

பிராந்திய, மற்றும் பூகோள அரசியலால் தொடர்ந்து பழிவாங்கப்பட்ட இந்த இலங்கை திருநாட்டின் மிகப்பெரும் அரசியல் ஆளுமை தனக்குக் கிடைத்த அரிய வாய்ப்பை செவ்வனே நிறைவேற்றி இன்று விடைபெறுகிறது. 

 நாடு நிர்கதியாக நின்ற போது அயல் நாட்டின் நாணயம் இங்கு புழக்கத்திற்கு வருமோ என்கின்ற அச்சமான சூழ்நிலையில் நாட்டை பொறுப்பேற்று தனி மனிதனாக நின்று உனது அத்தனை அனுபவங்களையும் ஒன்று சேர பயன்படுத்தி இன்று நம்மை தலை நிமிர்ந்த நாடாகவும் ஒரு சிறந்த புதிய தலைமைத்துவத்தை தேர்ந்தெடுக்கக்கூடிய சூழலையும் உருவாக்கிவிட்டு விடைபெறுகிறது. 

 ஒரு மனிதனின் மீது ஏற்படுகின்ற மரியாதை என்பது நாம் கஷ்டத்தில் இருக்கின்ற போது அவனால் ஆற்றப்படும் உதவிகளைக் கொண்டே அல்லது ஆறுதலைக் கொண்டே பன் மடங்காக அதிகரிக்கிறது

 அந்த வகையில் ஒரு லெஜெண்ட், இனவாத மற்ற ஒரு தேர்தலை அமைதியான ஒரு தேர்தலை நெஞ்சு படபடக்காத ஒரு தேர்தலை, நமக்கு பரிசாகத் தந்து தனது இடத்தை இன்னும் ஒரு நம்பிக்கையான தலைமைத்துவத்திடம் ஒப்படைப்பது என்பது இலங்கை மக்கள் தங்களது ஜனநாயகத்தை கொண்டாடுகிறார்கள் என்பதன் அடையாளமாகும் உங்கள் பணி என்றும் எமது நாட்டிற்கு ஒரு வரமாய் அமையட்டும்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!