அனுர 50.1 சதவீதத்தை எட்டுவது கடினம்! விருப்பு வாக்குகள் எண்ணப்படலாம்?
#SriLanka
#sri lanka tamil news
Thamilini
1 year ago
இரண்டாவது மற்றும் மூன்றாவது விருப்பு வாக்குகளை எண்ணும் பணியை தேர்தல் ஆணையம் தொடங்கும் என்றும், வெற்றியாளரின் அறிவிப்பு இன்று பிற்பகுதியில் அல்லது நாளை முற்பகுதி வரை தாமதமாகலாம் என்றும் அறியப்படுகின்றது.
தேசிய மக்கள் சக்தி ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கு இடையேயான இடைவெளி குறைவடைந்து வருகின்றது. ,
மேலும் அனுரகுமார திசாநாயக்க 50.1 சதவீதத்தை எட்டுவது கடினம் என்று எதிர்பார்க்கப்படுவதால், இரண்டாவது மற்றும் மூன்றாவது விருப்பத்தேர்வுகளை எண்ணும் பணி நடைபெற கூடும் எனவும் எதிர்பார்க்கபப்டுகின்றது.
எவ்வாறாயினும், 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் அனுரகுமார வெற்றி பெற்றுள்ளார் என தேசிய மக்கள் சக்தி வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.