நாட்டை விட்டு பறந்தார் நாமலில் மனைவி திலினி!
#SriLanka
#Namal Rajapaksha
Mayoorikka
10 months ago

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை சூழவுள்ள பகுதியில் நேற்று (09/21) இரவு முதல் கடுமையான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
அரசியல் பிரமுகர்கள் பலர் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி வேட்பாளர் த நாமல் ராஜபக்ஷவின் மனைவி திருமதி லிமினி வினோஜா வீரசிங்க மற்றும் அவரது தந்தை திரு திலகசிறி வீரசிங்க ஆகியோரும் இன்று (09/22) அதிகாலை 03.30 மணியளவில் டுபாய் சென்றுள்ளனர்.
அதன்படி நேற்று மாலை முன்னாள் அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே சென்னைக்கு சென்றுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தாய்லாந்தின் பேங்கொக்கிற்கும், இத்தே கந்தே சத்தாதிஸ்ஸ தேரர் ஹொங்கொங்கிற்கும் சென்றுள்ளார்.



