நாட்டை விட்டு வெளியேறும் அரசியல்வாதிகள்!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
10 months ago

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் (BIA) ஊடாக பௌத்த பிக்கு ஒருவர் உட்பட பல அரசியல்வாதிகள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக விமான நிலையத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அதன்படி, முன்னாள் அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே நேற்று மாலை (21) பிற்பகல் 2.25 மணியளவில் நாட்டிலிருந்து சென்னைக்கு புறப்பட்டார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார 11.15 மணியளவில் தாய்லாந்துக்கு பயணமானார். நேற்று. வண. இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் இன்று அதிகாலை 12.50 மணியளவில் ஹொங்கொங்கிற்கு புறப்பட்டார்.



