வரலாற்றில் மிகவும் அமைதியான தேர்தல்:பஃப்ரல் அமைப்பு பெருமிதம்

#SriLanka #Election
Mayoorikka
1 year ago
வரலாற்றில் மிகவும் அமைதியான தேர்தல்:பஃப்ரல் அமைப்பு பெருமிதம்

2024 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் வரலாற்றில் மிகவும் அமதியான தேர்தலாக அமைந்துள்ளதாக சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள் செயற்பாடு (PAFFREL) அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி இன்று தெரிவித்தார்.

 இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், தேர்தல் சட்டத்தை மீறிய 108 சம்பவங்கள் இன்று வரை பதிவாகியுள்ளன.

 தேர்தலின் போது அரச சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்வது மிகவும் குறைவாக இருந்ததாக ஹெட்டியாராச்சி குறிப்பிட்டுள்ளார்.

 பொலிஸ் மா அதிபர் (IGP) நாட்டில் இல்லாத போதும் தேர்தல்களை நடத்துவதற்கு பொலிஸார் சிறந்த ஆதரவை வழங்கியதாகவும் அவர் கூறினார்.

 இதேவேளை, இவ்வருட ஜனாதிபதி தேர்தலில் 75% முதல் 80% வரையிலான வாக்குகள் பதிவாகியுள்ளதாக PAFFREL குறிப்பிட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!