ஊரடங்கு தொடர்பில் பொலிஸ் தலைமையகத்தின் புதிய அறிவிப்பு
#SriLanka
#Curfew
#National Identity Card
Prasu
10 months ago

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் வீதியை பயன்படுத்துவது தொடர்பில் பொலிஸ் தலைமையகம் மீண்டும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் காலப்பகுதியில் பயணிப்பதற்கு பொலிஸ் நிலையங்களினால் ஊரடங்குச் சட்ட அனுமதிப்பத்திரம் வழங்கப்பட மாட்டாது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்தியாவசிய சேவைகள் மற்றும் அவசர சேவைகளுக்காக பயணிக்கும் போது உங்களின் உத்தியோகபூர்வ அடையாள அட்டையை ஊரடங்கு உத்தரவு அனுமதிப்பத்திரமாக பயன்படுத்த முடியும் எனவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.



