இம்முறை 7.4 சதவீதமாக வீழ்ச்சியடைந்த வாக்களிப்பு வீதம்!
#SriLanka
#Election
Mayoorikka
10 months ago

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் கடந்த காலங்களோடு ஒப்புடுகையில் வாக்களிப்பு வீதம் 7.4 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டில் சுமார் நாற்பது லட்சம் பேர் நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இன்றைய தினம் மாலை 4.00 மணியுடன் நிறைவடைந்த ஜனாதிபதி தேர்தலில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களில் 75 வீதமானவர்கள் வாக்களித்துள்ளனர்.
இதன்படி, சுமார் 40 லட்சம் பேர் வாக்களிக்கத் தவறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.



