நாடளாவிய ரீதியில் பிற்பகல் 4 மணிவரையிலான வாக்களிப்பு வீதம்!
#SriLanka
#Election
#Vote
Mayoorikka
1 year ago
ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்கெடுப்பில் பிற்பகல் 4 மணிவரையிலான நிலவரத்தின்படி, நாடளாவிய ரீதியில் 70 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளன.
இதன்படி, குருநாகல் மாவட்டத்தில் 65 சதவீதமும், கேகாலை மாவட்டத்தில் 65 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.
அத்துடன், கம்பஹா மாவட்டத்தில் 62 சதவீதமும், பதுளை மாவட்டத்தில் 62 சதவீதமும், காலி மாவட்டத்தில் 61 சதவீதமும் புத்தளம் மாவட்டத்தில் 57 சதவீதமும் யாழ்ப்பாண மாவட்டத்தில் 50 சதவீத வாக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, 4 மணியுடன் ஜனாதிபதி தேர்தல் நிறைவடையும் நிலையில், குறித்த சந்தர்ப்பத்தில் வரிசையில் நின்றிருக்கும் அனைவருக்கும் வாக்களிக்கச் சந்தர்ப்பம் வழங்கப்படுமெனத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.