பிரான்சில் கொல்லப்பட்ட தமிழர் யார்? ஏன் கொல்லப்பட்டார்?
#Arrest
#France
#Murder
#Women
#SriLankan
Prasu
10 months ago

பிரான்ஸில் இலங்கையை சேர்ந்த தமிழ் பெண் ஒருவர் கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
பாரிஸின் புறநகர் பகுதியான Limeil-Brévannes பகுதியில் வசித்து வந்த குடும்பம் ஒன்றில் ஏற்பட்ட தகராறு காரணமாக கணவனால் கொலை செய்யப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சந்தேக நபரான கணவன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 27 வயதான தமிழ் பெண் படுகொலை செய்யப்பட்ட நிலையில் 23 வயதான மற்றுமொரு பெண் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார்.
குடும்ப வன்முறையே கொலைக்கான காரணம் என பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.



