பிரான்சில் கால் துண்டாக்கப்பட்ட நிலையில் சடலம் ஒன்று மீட்பு
#Death
#France
#Murder
Prasu
1 year ago
Aulnay-sous-Bois (Seine-Saint-Denis) நகரில் உள்ள parc du Sausset பூங்காவில் இருந்து கால் துண்டாக்கப்பட்ட நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
brigade territoriale de contact பிரிவு காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு மனித கால் ஒன்று துண்டாக்கப்பட்டு கிடந்ததை பார்வையிட்டுள்ளானர்.
பின்னர் அங்கிருந்து சில மீற்றர் தொலையில் புதர்பகுதியில் மீதி உடலம் கிடந்துள்ளது. இச்சம்பவம் அங்கிருப்பவர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
உடனடியாக சடலம் மீட்கப்பட்டு உடற்கூறு பரிசோதனைகளுக்காக கொண்டுசெல்லப்பட்டது.
சடலம் மிகவும் சிதைவடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் மேலதிக விசாரணைகள் குற்றவியல் காவல்துறையினருக்கு மாற்றப்பட்டது.