பாலஸ்தீனத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த இஸ்ரேல் ராணுவ வீரர் மரணம்
#Death
#Israel
#Soldiers
#Palestine
#Indian
Prasu
3 weeks ago
பாலஸ்தீனத்தின் மேற்குக் கரையில் வாகன மோதல் தாக்குதலில் 24 வயதான இந்திய வம்சாவளி இஸ்ரேலிய வீரர் கொல்லப்பட்டுள்ளார்.
மேற்குக் கரையின் Beit El குடியேற்றத்திற்கு அருகில் நடந்த வாகன மோதல் தாக்குதலில் Bnei Menashe சமூகத்தை சேர்ந்த 24 வயதான இந்திய வம்சாவளி இஸ்ரேலிய வீரர் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொல்லப்பட்ட ராணுவ அதிகாரியான சார்ஜென்ட் ஜெரி கிதியோன் ஹங்கல் Nof HaGalil பகுதியில் வசித்து வருவதுடன் Kfir Brigade’s Nahshon படைப்பிரிவின் வீரர் என்றும் இஸ்ரேலிய ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது.
கொல்லப்பட்ட கிதியோன் ஹங்கல் 2020ம் ஆண்டு இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் இருந்து இஸ்ரேலுக்கு குடியேறியவர் என்பது குறிப்பிடத்தக்கது.