கிளிநொச்சியில் இடம்பெற்ற கோர விபத்து: இரண்டு பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு
#SriLanka
#Accident
#Kilinochchi
Mayoorikka
2 years ago
கிளிநொச்சி A9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் ஸ்தலத்தில் பலியாகியுள்ளார். குறித்த விபத்த இன்று காலை 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
விபத்தில் கனகாம்பிகைக் குளம் பகுதியைச் சேர்ந்த அருள்நேசன் அருள்வதனன் என்ற 2 பிள்ளைகளின் தந்தை ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளார். 155 ம் கட்டை சந்தியில் ஆட்களை ஏற்றுவதற்காக குறுந்தூர பேருந்து தரிப்பிடத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.

கிளிநொச்சி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் பேருந்தை முந்தி பயணித்துள்ளது. அதே திசையில் பயணித்த பார ஊர்தி குறித்த மோட்டார் சைக்கிளை மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரே உயிரிழந்துள்ளார்.

குறித்த பாரஊர்தியின் சாரதி கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். விபத்து தொடர்பான விசாரணைகளை கிளிநொச்ச பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே