இந்தியாவிற்கு நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க் கருவிகளை விற்கும் அமெரிக்கா

#India #America #Weapons
Prasu
1 year ago
இந்தியாவிற்கு நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க் கருவிகளை விற்கும் அமெரிக்கா

அமரிக்க பாதுகாப்பு அமைச்சர் லாயிட் ஆஸ்டின் அழைப்பின் பேரில் ஆகஸ்ட் 23 முதல் 26 வரை 4 நாட்கள் பயணமாக இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கின் இந்த விற்பனையை அங்கீகரித்துள்ளார்.

இந்த ஒப்பந்தத்தில் AN/SSQ-53G, AN/SSQ-62F மற்றும் AN/SSQ-36 ஆகிய நீர்மூழ்கி எதிர்ப்பு சோனோபாய் கருவிகள் இந்தியாவுக்கு விற்கப்பட உள்ளது. 

இந்திய எல்லையில் சீன ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில் இந்த கருவிகள் இந்தோ பசிபிக் கடற்பகுதியில் இந்தியாவின் பாதுகாப்பு திறனை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ராஜ்நாத் சிங் இந்த பயணத்தின்போது அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் லாயிட் ஆஸ்டின், தேசிய பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமெரிக்க அதிபரின் உதவியாளர் ஜாக் சல்லிவனையும் சந்திக்கிறார். 

பாலஸ்தீன போர், மேற்கு வங்காள விவகாரம் உள்ளிட்டவற்றைக் குறித்து அவர்களுடன் கலந்துரையாட உள்ளார். 

ராஜ்நாத் சிங்கின் இந்தப் பயணம் இந்தியா-அமெரிக்கா இடையிலான விரிவான உலகளாவிய பாதுகாப்பு கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4