சர்வதேச நாணயநிதியத்துடனான உடன்படிக்கையில் மாற்றங்கள்! சஜித் வாக்குறுதி

#SriLanka #Sajith Premadasa #IMF
Mayoorikka
2 years ago
சர்வதேச நாணயநிதியத்துடனான உடன்படிக்கையில் மாற்றங்கள்! சஜித் வாக்குறுதி

ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற பின்னர் சர்வதேச நாணயநிதியத்துடனான உடன்படிக்கையில் மாற்றங்களை மேற்கொள்வேன் என ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித்பிரேமதாச மீண்டும் வாக்குறுதியளித்துள்ளார்.

 சர்வதேச நாணயநிதியத்துடனான உடன்படிக்கை பொருளாதார வளர்ச்சி குறித்து கவனம் செலுத்தவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 தொழில்சார் வல்லுனர்களின் தேசிய பேரவை ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். அரசாங்கம் கடன்பேண்தகுதன்மை குறித்து மாத்திரம் கவனம் செலுத்தக்கூடாது,வர்த்தகத்தின் ஏனைய விடயங்கள் குறித்தும் கவனம் செலுத்தவேண்டும் என சஜித்பிரேமதாச தெரிவித்துள்ளார்.

 இலங்கை அரசாங்கமும் சர்வதேசநாணயநிதியமும் 2029 இல் 3.1 வீத பொருளாதார வளர்ச்சி என்பதை ஏற்றுக்கொண்டுள்ளன, இது போதுமானதல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார். நாங்கள் எங்கள் பொருளாதாரத்தை வளர்ச்சி பாதையை நோக்கி கொண்டு செல்லவேண்டும்,என தெரிவித்துள்ள சஜித்பிரேமதாச ஐக்கிய மக்கள் சக்தி பொருளாதார சீர்திருதத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் என தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4