தெற்கு லெபனானில் கொடூர தாக்குதல் நடத்திய இஸ்ரேல் : பொதுமக்கள் பலர் பலி!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
1 year ago
தெற்கு லெபனானில் கொடூர தாக்குதல் நடத்திய இஸ்ரேல் : பொதுமக்கள் பலர் பலி!

தெற்கு லெபனானில் உள்ள Nabatieh நகரின் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் 10 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

இறந்தவர்களில் இரண்டு குழந்தைகளும் அடங்குவர். மேலும் 5 பேர் காயமடைந்தனர். இறந்தவர்கள் அனைவரும் சிரியர்கள் என்று கூறப்படுகிறது.  

இதற்கிடையில், ஹிஸ்புல்லா குழு பயன்படுத்திய ஆயுதக் கிடங்கை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. 

இதற்கு பதிலடியாக, வடக்கு இஸ்ரேலில் உள்ள ஒரு கிராமத்தின் மீது 55 ராக்கெட்டுகளை வீசியதாக ஹிஸ்புல்லா அறிவித்தது. இரண்டு இஸ்ரேலிய வீரர்கள் காயமடைந்தனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4