ஜப்பான் செல்லும் ஏர் இந்தியா விமானங்கள் ரத்து

#India #Flight #Japan #cancelled
Prasu
1 year ago
ஜப்பான் செல்லும் ஏர் இந்தியா விமானங்கள் ரத்து

ஜப்பானில் உள்ள நரிட்டா நகருக்கு டெல்லியில் இருந்து ஏர் இந்தியா விமானம் இயக்கப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில், டோக்கியோ வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள எச்சரிக்கையை தொடர்ந்து டெல்லி-நரிட்டா விமான சேவை ரத்து செய்யப்படுவதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.

இது குறித்து அந்நிறுவனம் 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "மோசமான வானிலை எச்சரிக்கை காரணமாக டெல்லி-நரிட்டா-டெல்லி வழித்தடத்தில் நாளை (16.08.2024) ஏ.ஐ. 306 மற்றும் ஏ.ஐ. 307 ஆகிய விமானங்கள் ரத்து செய்யப்படுகின்றன.

ஆகஸ்ட் 16-ந்தேதி டெல்லி-நரிட்டா வழித்தட விமானங்களில் முன்பதிவு செய்த பயணிகள் மறுபயணம் மேற்கொள்வதற்கான டிக்கெட் கட்டணத்தில் சலுகை வழங்கப்படும். 

மேலும் விமான சேவை ரத்து செய்யப்பட்டதற்கான முழு பணம் திரும்பி வழங்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4