பாகிஸ்தானில் பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த இளம் பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்

#Arrest #Women #Pakistan #Belgium #Rape
Prasu
1 year ago
பாகிஸ்தானில் பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த இளம் பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்

பாகிஸ்தான் இஸ்லாமாபாத்தில் சாலையோரத்தில் ஒரு இளம்பெண் கை,கால்கள் கட்டப்பட்ட நிலையில் மயங்கி கிடந்தார். இதை பார்த்த பொதுமக்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். 

இது தொடர்பாக பாகிஸ்தானில் உள்ள ஒரு தொலைக்காட்சியிலும் வீடியோ வெளியானது. 

இதனையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அந்த பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. 

போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியானது. அந்த பெண்ணிற்கு 28 வயது ஆகிறது. அவர் பெல்ஜியம் நாட்டை சேர்ந்தவர் ஆவார். சமீபத்தில்தான் அவர் பாகிஸ்தான் வந்தார்.

ஒரு கும்பல் தொடர்ந்து 5 நாட்கள் அடைத்து வைத்து தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த பெண் போலீசில் தெரிவித்தார். இதை கேட்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். 

அப்பெண் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் தமீசுதீன் என்பவரை விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மற்றவர்கள் குறித்து போலீசார் அவரிடம் விசாரித்து வருகின்றனர். 

இதில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகலாம் என்று தெரிகிறது. பாகிஸ்தானில் நேற்றுதான் சுதந்திரதினம் கொண்டாடப்பட்டநிலையில், பெல்ஜியம் நாட்டை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அந்நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4