பிரான்சில் விபத்துக்குள்ளான இரண்டு ரஃபேல் விமானங்கள்

#Death #France #Accident #Jet
Prasu
2 months ago
பிரான்சில் விபத்துக்குள்ளான இரண்டு ரஃபேல் விமானங்கள்

இரண்டு ரஃபேல் விமானங்கள் விபத்துக்குள்ளானதில், அதன் இரு விமானிகளும் கொல்லப்பட்டுள்ளனர். 

ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் இத்தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். ரஃபேல் விமானம் எனப்படுவது நவீன வசதிகளைக் கொண்ட பிரான்சுத் தயாரிப்பு போர் விமானமாகும். 

பிரான்சின் வடகிழக்கு பகுதியான Meurthe-et-Moselle இல் நேற்று ஓகஸ்ட் 14, புதன்கிழமை இரு ரஃபேல் விமானங்கள் விபத்துக்குள்ளானது.

தற்போது வரையான நிலவரப்படி, விமானங்கள் விபத்துக்குள்ளானதும், அதன் விமானிகளான கப்டன் Sébastien Mabire மற்றும் கப்டன் Lieutenant Matthis Laurens ஆகிய இருவரும் பலியானதாகவும் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் உறுதிப்படுத்தியுள்ளார்.

உலங்குவானூர்திகளுடன் மீட்புக்குழுவினர் விமானம் விழுந்து நொருங்கிய பகுதியை வட்டமடித்து, விமானத்தின் பாகங்களைக் கண்டுபிடித்தனர். விபத்து ஏற்பட்டமைக்குரிய காரணங்கள் குறித்து ஆராயப்பட்டு வருகிறது.

பலியான இரு விமானிகளின் குடும்பங்களுக்கும் நாட்டு மக்கள் சார்பாக இரங்கல்கள் தெரிவிப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டார். விபத்துக்குள்ளான இரு விமானங்களும் ஜேமனியில் இருந்து நாடு திரும்பிக்கொண்டிருந்ததாகவும், நண்பகல் 12.30 மணி அளவில் விபத்தில் சிக்கியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

மூன்றாவது ரஃபேல் விமானம் ஒன்று அதிஷ்டவசமாக விபத்தில் இருந்து தப்பியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!