சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை இயக்கும் டிராகன் இயக்குநர்

#TamilCinema #Director #rajini kanth #Movie
Prasu
1 hour ago
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை இயக்கும் டிராகன் இயக்குநர்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் தலைவர் 173 படத்தை டிராகன் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கவுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘ஜெயிலர் 2’ படத்தின் படப்பிடிப்பில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். 

இந்தப் படத்தைத் தொடர்ந்து, அவர் நடிக்கும் 173வது படத்தை உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது.

முதலில் இந்தப் படத்தை சுந்தர் சி இயக்குவார் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், சில காரணங்களால் அவர் விலகியதைத் தொடர்ந்து, அந்தப் பொறுப்பு தற்போது அஸ்வத் மாரிமுத்துவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

இதில் ரஜினிகாந்த் மற்றும் அஸ்வத் மாரிமுத்து இதுவரை 5 முறை சந்தித்துக் கதை விவாதம் நடத்தியுள்ளனர். 

இந்தப் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு 2026 ஜனவரி முதல் வாரத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!