இலங்கையின்  ஜனாதிபதி தேர்தலில் வெல்லப் போவது யார்? மக்கள் யாருக்கு ஆதரவு செலுத்த வேண்டும்

#SriLanka #Election #Sajith Premadasa #Ranil wickremesinghe #Namal Rajapaksha
Lanka4
1 month ago
இலங்கையின்  ஜனாதிபதி தேர்தலில் வெல்லப் போவது யார்? மக்கள் யாருக்கு ஆதரவு செலுத்த வேண்டும்

இலங்கையில் வருகின்றது ஜனதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க அடுத்ததாக எதிர்க் கட்சியாக இருக்கின்ற சஜித் பிரேமதாஸ் அவர்கள் அடுத்ததாக நாமல் ராஜபக்ஷ அவர்கள் அடுத்ததாக ஜே விபி கட்சியின் அனுரகுமார திசாநாயக்க அடுத்ததாக தமிழ் பொது வேட்பாளராக அரியநேந்திரன் அவர்கள் அத்தோடு உதிரி கட்சி உறுப்பினர்கள் என மொத்தம் முப்பதிற்கும் மேற்பட்டோர் இந்த தேர்தலில் போட்டியிட இருக்கிறார்கள்.

 இந்த தேர்தல் தொடர்பாக பல கேள்விகளும் பதில்களும் ஊடகங்களிலே பறக்க விடப்பட்டிருக்கிறது அந்த பதில்கள் கேள்விகளுக்கு சில பட்டங்கள் பறந்துகொண்டிருக்கின்றன. பல வர்ணங்களாக பறந்துகொண்டிருக்கின்றன. எந்த வேட்பாளரை அல்லது யாரை வெல்ல வைக்கலாம் என்பது ஆகாயத்தை பார்த்து மக்கள் பட்டத்தை ரசிப்பது போல எதைச் செய்யலாம் என்ற ஒரு கேள்விக்குறியோடு இருக்கிறார்கள். 

 அந்த பறக்க விடப்பட்டிருக்கின்ற பட்டங்களிலே சில பட்டங்கள் விரைவாக காற்றில் அடித்துச் செல்லக் கூடியவைகளாக இருக்கின்றன சில பட்டங்கள் வால் அறுந்து அவை திசை தெரியாமல் போகக்கூடிய பட்டங்களாக இருக்கின்றன சில பட்டங்கள் பலமாகவும் சில பட்டங்கள் பலம் மற்றும் பலமற்றதாகவும் பார்க்கக் கூடியதாக இருக்கிறது. 

 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தொடர்பில் லங்கா 4 ஊடகம் ஒரு கருத்துக்கணிப்பின் ஊடாக சொந்தக் கருத்திலே சொந்த ஜதார்த்தமான துரப்பார்வையிலே அதாவது நடந்து வந்த பாதையையும் நடந்து செல்ல போற பாதையையும் நாங்கள் உற்று நோக்கி பார்த்து இந்த சிறிய பதிவினை எங்களுடைய லங்கா 4 ஊடக நேயர்களுக்காக நாங்கள் பிரசுரிக்கின்றோம். 

 இதனுடைய விளைவு இதனுடைய பெறுபேறு இதனுடைய முடிவுக்கான பதில் தேர்தல் முடிவடைந்ததன் பிற்பாடு யார் வென்றிருக்கிறார்களோ அப்பொழுதுதான் அதனுடைய முடிவை நாங்கள் புசிக்க முடியும்.

 ரணில் விக்ரமசிங்க 

images/content-image/2024/08/1723703731.webp

 முதலில் ரணில் விக்ரமசிங்கவை எடுத்துக்கொண்டால் அவர் பழம்பெரும் இலங்கை அரசியல்வாதி.

 பொதுவாக அவர் கிறிஸ்தவ மத பரம்பரையில் வந்திருந்தாலும் கூட பௌத்தத்தை தழுவி ஒரு பரம்பரையாக ஜே ஆர் இனுடைய பரம்பரையினரோடு இணைந்து தொடர்ந்து வந்திருக்கின்ற ஒரு அரசியல்வாதியாக நாங்கள் கணிக்க கூடியதாக இருக்கிறது. 

அவரைப் பொறுத்தவரை படித்தவர், அவர் ஒரு சட்டத்தரணியாக மேற்படிப்பு படித்திருக்கிறார் பல முறை தேர்தலிலே போட்டியிட்டிருக்கின்றார். மற்றும் பல முக்கிய விடயங்களிலேயே போர் நிறுத்தம் போன்ற பல விடயங்களில் தலையை கொடுத்து குனிந்தும் வளைந்தும் நிமிர்ந்தும் தன்னுடைய அரசியலை கொண்டு செல்பவர். 

 இளைஞராக இருந்து இலங்கையிலே அதி குறைந்த வயதிலேயே இளைஞராக அரசியலுக்கு வந்த ஒருவர் இதைத் தாண்டி அவருடைய சில விடயங்களை பார்க்கப்போனால் சூழ்ச்சியோ அல்லது அவருடைய தவறோ அல்லது அவர்களோடு இருந்ததனாலும் பல பழிகளை குமந்திருக்கின்றார்.

 அது ஒரு புறம் இருக்க கடந்து வந்த பாதையிலே கடைசியாக அவர் ஒரு இடத்தில் கூட வெல்லாத இவருடைய கட்சிக்கு ராஜபக்ஷவினருக்கு எதிரான சர்ச்சை ஆர்ப்பாட்டத்தின் பொழுது ராஜபக்ச குடும்பத்திற்கு ஏற்பட்ட அந்த அபாயகரமான நிலையிலே ரணில் விக்கிரமசிங்க அவர்களிடத்தில் இந்த பதவியை அதாவது குழைந்து எரிந்து கொண்டிருந்த மற்றும் பட்டினியிலே வாடிக் கொண்டிருந்த இலங்கையை ஒப்படைத்து விட்டு ராஜபக்ச குடும்பத்தினர் சில மாதங்கள் நாட்டை விட்டு வெளியே ஓடினர்.

 அந்தக் காலகட்டத்தை மக்கள் ராஜபக்ச ஆர்ப்பாட்டத்திற்கு முன்பு ஆர்ப்பாட்டத்திற்கு பின்பு இலங்கை என்பதை கிறிஸ்துவுக்கு முன் கிறிஸ்துவுக்கு பின் என்று கணிப்பது போல ஒரு காலகட்டத்தை கணிக்க கூடிய காலகட்டமாக அது கருதப்பட்டது. 

 அந்த காலகட்டத்தின்  பின்னராக பல நாடுகளிடத்தில் கடன் வாங்கி உதவிகளைப் பெற்று மற்றும் சுற்றுலாத் துறையை ஊக்குவித்து சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்புகளை வழங்கி சுற்றுலாத் துறை மூலமும் உள்ளூர் உற்பத்திகளை அதிகரித்ததன் மூலமும் ரணில் விக்கிரமசிங்க படிப்படியாக இதுவரையிலும் தன்னுடைய பணியை சரியாக செய்து கொண்டிருக்கிறார் என்று தான் நாங்கள் நினைக்க வேண்டும்.

   காரணம் நாங்கள் நடுநிலையாக பொதுவாக கூறுவதாக இருந்தால் இங்கே மிகைப்படுத்தியோ அல்லது தாழ்த்தியோ பேசக்கூடாது அதன் காரணத்தால் மக்கள் அனைவரும் சற்று ஒரு நம்பிக்கை அதாவது முன்பிருந்ததை விட ஒரு மூச்சு விடுகின்ற அளவுக்கு அல்லது ஒரு குடும்பத் தலைவன் தன்னுடைய குடும்பத்தை பட்டினியில் இருந்து காப்பதற்காக அறாவட்டிக்கு பணம் வாங்கி தன்னுடைய குடும்பத்திற்கு கஞ்சி வார்க்கின்ற வேலையை ரணில் விக்கிரமசிங்க செய்து கொண்டிருக்கிறார். 

 அத்தோடு கூட நாட்டை முன்னேற்றுகின்ற ஒரு சில விடயங்களிலும் ஏற்றுமதி இறக்குமதி போன்ற  விடயங்களிலும் அவர் துரிதமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

 இந்தநிலையிலேயே தான் இப்பொழுது தேர்தல் வந்திருக்கிறது இந்த தேர்தலிலே தற்பொழுது அடுத்ததாக இருக்கின்ற கட்சிகள் இவர் மீது சுமத்தப்படுகின்ற குற்றச்சாட்டுக்கள் சரி தவறு என்பதை மக்கள்தான் பார்த்துக் கொள்ள வேண்டும். அது சரியா தவறா என்பதை நீங்களே புரிந்து கொள்ள வேண்டும்.

 ஜதார்த்தமாக தொடர்ந்தும் ரணில் விக்கிரமசிங்கவே ஜனாதிபதியாக வந்தால் இந்த நாடு மேலும் முன்னேறுமா அல்லது அப்படியே இருக்குமா அல்லது கடனுக்குள் மூழ்குமா அல்லது இதைவிட படிப்படியாக அவர் குறிப்பிட்ட ஆண்டு நெருங்குகின்ற பொழுது முன்னேற்றத்திற்கு வருமா என்பதை அடுத்து இருக்கின்ற சஜித் பிரேமதாசா அவர்கள் முன்வைக்கின்ற திட்டங்கள் மற்றும் நாமல் ராஜபக்ஷ முன்வைக்கும் திட்டங்கள் அனுர முன்வைக்கும் திட்டங்களை வைத்து தான் ரணில்விக்கிரமசிங்க அவர்களை, ஏனையோர் வென்றால் செய்வார்களா? செய்தால் மக்கள் யாருக்கு வாக்களிப்பார்கள் அல்லது வெறும் பேச்சோடு விட்டுவிடுவார்களா என்பதை கடந்த காலத்திலே அவர்கள் ஊடாக பெற்ற அனுபவத்தையும் வைத்து அவர்களுக்கு இப்பொழுது இருக்கின்ற தகமைகள், அவர்கள் சில தவறுகள் செய்திருக்கலாம், அவர்கள் வந்தால் இதைவிட மக்கள் பெருமூச்சு விடக் கூடியவாறு இருக்கும் என்று மக்கள் நினைத்தால் வேறு வாக்காளரை தெரிவு செய்யலாம்.

 அல்லது ரணில் விக்ரமசிங்க திருப்தியாக இருக்கும் என நினைத்தால் நீங்கள் ரணில் விக்ரமசிங்கவை கூட தெரிவு செய்யலாம் என்பது லங்கா 4 ஊடகத்தினுடைய கருத்து. 

 சஜித் பிரேமதாச 

images/content-image/2024/08/1723704101.webp

 அடுத்ததாக சஜித் பிரேமதாச. இவர் பிரேமதாச அவர்களுடைய புத்திரன். அவர்களுடைய ஆளுமையோ அல்லது அவருடைய அரசியல் நகர்வுகளோ அவருடைய துணிச்சலோ அல்லது அவருடைய சாணக்கியமோ அவருடைய ஒரு பவர் என்று கூறப்படும் அந்த கெத் இவருக்கு இருக்கிறதா என்பதை முதலில் பார்க்க வேண்டும். 

 அந்த கேத் மட்டும் இருந்தாலும் காணாது தற்காலச் சூழலிலே தற்போதைய இலங்கையை கொண்டு நடத்துவதற்கு உலக நாடுகள் இவருக்கு ஆதரவு செலுத்துமா? அல்லது இப்பொழுது வந்து கொண்டிருக்கின்ற உதவிகள் அல்லது இப்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற ஒவ்வொரு விடயங்களும் மற்றும் மக்கள் ஆதரவு முழுமையாக இருக்கிறன்றதா? சஜித் அவர்கள் இஸ்லாமியர்களுக்கும் தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் சம உரிமை என்ற பெயரில் வந்தால் அது சிங்கள மக்களால் ஏற்றுக்கொள்ளப்படுமா சமஸ்டி உரிமை மற்றும் 13-வது திருத்தச் சட்டம் இப்படியான விடயங்களை பல தமிழ் கட்சிகள் முன் வைக்கிறார்கள் அதை கொடுப்பதற்கு சிங்கள மக்கள் இவருக்கு ஆதரவு செலுத்துவார்களா என்பதையும் பார்த்து, அதைவிட முக்கியமாக அவர் ஆட்சிக்கு வந்தால் சிங்கள மக்களுடைய அதிகமான வாக்குகள் அவருக்கு தேவைப்படும் அடுத்ததாக தமிழர்கள் இஸ்லாமியர்களுடைய வாக்குகளை பெறுவதற்கு அவருடைய தகமை இருக்கிறதா என்பதை மக்கள் தான் பார்த்துக் கொள்ள வேண்டும். 

 முக்கியமாக வெளிநாட்டு உதவி இல்லாமல் இலங்கை நகரவே முடியாது முதலாவது கடன் உதவி இரண்டாவது பொருளாதர உதவி மூன்றாவதாக இலங்கைக்கு ஆதரவு தரும் சுற்றுலாத் துறை இலங்கையின் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்திக் கொண்டிருக்கும் சுற்றுலாத்துறைக்கு அவருடைய ஆட்சியில் என்ன திட்டம் தற்பொழுது இருக்கின்றதை விட அதிகப்படியாக என்ன இருக்கப் போகின்றது என்ன செய்யப் போகின்றார்? என்பதை பொறுத்தும் உள்ளது. 

 அடுத்ததாக ரணில் விக்கிரமசிங்க அவர்களை விட எதை வைத்து அதிகமாக நாட்டை விரைவாக முன்னேற்றுவதற்கு செய்வார் என்ற ஊகத்தை நீங்கள் வைத்து தூரப்பார்வையில் பார்த்து அவர் யாரோடு நிற்கிறார் நிற்பவர்களுடன் இருப்பதால் அவருக்கு வெளிநாடுவாழ் இலங்கையர்கள்,    புலம்பெயர் தமிழர்கள் ஆதரவளிப்பார்களா அல்லது அவருக்கு ஆதரவு அளிக்க மாட்டார்களா அல்லது புலம்பெயர் தமிழழரின் முதலீடுகள் குறையுமா? இது எல்லாவற்றையும் வைத்து பார்த்து சஜித் அவர்களை ஆதரிப்பதா இல்லையா என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும். 

 இதற்கு இந்த ஜனாதிபதி தேர்தலில் வெறும் இலங்கையில் இருக்கின்ற வாக்குகளால் மாத்திரம் இந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதியாக ஒருவர் வர முடியாது புலம் பெயர்ந்து இருக்கின்ற தமிழர் இஸ்லாமியர் மற்றும் சிங்கள மூவின மக்களும் பொருளாதார ரீதியாக அவர்கள் இலங்கைக்கு பயமில்லாமல் வந்து அவர்களுடைய முதலீடுகளை செய்வதற்கு ரணில் விக்கிரமசிங்க அவர்களை விட அதிகமாக ஒரு பாதுகாப்பு ஏற்படுமாக இருந்தால் நிச்சயமாக சஜித் பிரேமதாசா அவர்கள் கூட இந்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றியாளராக வருவதையும் லங்கா4 ஊடகம் ஆதரிக்கிறது.

 நாமல் ராஜபக்ச 

images/content-image/2024/08/1723704369.jpg

 அடுத்ததாக நாமல் ராஜபக்ச அவர்கள். இவர் ஒரு இளைஞர். இவர் தான்சார்ந்த இளைஞர் வட்டத்தை கைக்குள் வைத்திருப்பவர். அவருடைய குடும்பத்திலே அவருடைய அப்பா சித்தப்பாக்கள் இவர்களை தாண்டி வேறு ஒரு சிறிய மாற்றத்தோடு தன்னுடைய அரசியலை முன்னெடுத்து கொண்டு செல்பவர்.

 அத்தோடு கூட சிங்களவர் மாத்திரமல்ல இஸ்லாமியர் மாத்திரம் இல்லை தமிழர்களிடத்திலையும் சிறிய இளைஞர்கள் வட்டத்தையும் அவர்களின் எதிர்பார்ப்பையும் வைத்திருக்கின்ற ஒரு இளைஞராக இருக்கிறார். 

 அவருடைய குடும்பம் ஊழல் என்ற ஒரு குற்றச்சாட்டுக்குள் இருந்தாலும் கூட இவர் ஒரு இளைஞராக இருக்கின்ற காரணத்தினால் இலங்கையை வளர்க்க வேண்டியும் ஏன் தான் அரசியலில் வளர வேண்டிய ஒரு கட்டாய சூழ்நிலையில் இருக்கின்றார். 

 அவருடைய வயதை தாண்டி எத்தனையோ வருடங்கள் அந்த அரசியலுக்கு வர வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கிறது அதனால் இவர் கடந்து வந்த கால வாழ்க்கையை நீங்கள் நினைக்கிறீர்களா மறக்கிறீர்களா அது உங்களுடைய விருப்பம் லங்கா 4 ஊடகத்தின் ஊடாக நாங்கள் கூற வேண்டிய விடயம் இவருடைய அணுகுமுறைகள் இவர் நடந்து கொள்ள வேண்டிய அவரின் நிர்பந்த சூழலை. 

 தான் முன்னுக்கு வரவேண்டும் தன்னுடைய ஆட்சியை தக்கவைக்க வேண்டும் தன்னுடைய பரம்பரை அரசியலுக்கு வரவேண்டும் என்பதற்காக அவர் ஊழல்களை குற்றச்சாட்டுகளை தன் தலையில் விழ்த்தாமல் தன்னுடைய அரசியலை முன் கொண்டு நடத்த வேண்டிய கட்டாய சூழ்நிலைக்கு ஆக்கப்பட்டிருக்கிறார்  இவர் என்பது அனைவரும் பார்க்கக்கூடிய விடயமாக இருக்கிறது.

 மற்றும் இவருடைய கட்சியிலேயும் இளைஞர்களை இணைத்து அவர் நாட்டை முன்னேற்ற வேண்டும் என்ற ஒரு இளைஞர் துடிதுடிப்பான ஆர்வம் இருப்பதாகவும் தெரிய வருகிறது. அவர் இலங்கை ஜனாதிபதியாக வந்தால் உலக நாடுகள் இவருக்கு ஆதரவு செலுத்துமா இல்லையா இவர் ஆட்சிக்கு வந்தால் அல்லது ராஜபக்சக்கள் மீது சுமத்தப்பட்ட அந்த பழிகள் இவர் மீதும் பாயுமாமா? அல்லது மஹிந்த பசில் கோத்தபாயவிற்கு கிடைத்த பிற நாடுகளின் ஆதரவு இவருக்கும் கிடைக்குமா கிடைத்தால் இவர் எப்படி இதனை கொண்டு செல்ல போகின்றார் இவருக்கு ஆலோசகர்களா மூவரும் இப்பருப்பார்களா அப்படி   ஆலோசகர்களாக அவருடைய சித்தப்பாமார் அப்பா இருந்தால் அது மீண்டும் அவர்கள் மறைமுகமாக அவர்களுடைய ஆட்சி போல ஆகிவிடுமா? என பல கேள்விகள் இருக்கின்றன.

   இருந்தாலும் கூட இளைஞர்கள் ஆகிய நீங்களும் வயோதிபராக நீங்களும் ஒரு இளைஞர்கள் வட்டம் வர வேண்டும் என்று நினைக்கின்ற நீங்களும் இவர் வருவதா இல்லையா அல்லது நடந்து வந்த பாதையை பார்க்க போகின்றீர்களா அல்லது இவரும் ஆட்சிக்கு வந்த பிற்பாடு அப்பாவை போன்ற சர்ச்சைகள் இவரையும் சூளுமா என்ற ஒரு கேள்விக்குறியும் இருக்கிறது.

 இவை அனைத்தையும் ஊகித்து அவர் ஜனாதிபதி தேர்தலில் வெல்ல வேண்டுமா இல்லையா என்பதை ஒட்டுமொத்தமான இலங்கை மக்கள் உன்னிப்பாக கவனித்து இவருக்கு வாக்களித்து இவரை ஜனாதிபதியாக மக்களாகிய மக்கள் மன்றம் உங்களுக்கு விருப்பமாக இருந்தால் நிச்சயமாக நீங்கள் இவரை கூட ஜனாதிபதி ஆக்கலாம் அது உங்கள் கையில் தான் இருக்கிறது இது லங்கா 4 ஊடகத்தில் வெறும் கருத்தாக அமைகிறதே தவிர அதிலே நீங்கள் ரணிலை கொண்டு வரப் போகின்றீர்களா அல்லது சஜித்தையோ அல்லது நாமல் ராஜபக்சே அவர்களை கொண்டு வரப் போகின்றீர்களா என்பதும் உங்களுடைய கையில் தான் இருக்கிறது. 

 அனுர குமார திசாநாயக்க 

images/content-image/2024/08/1723704611.webp

 அடுத்ததாக ஜேவிபி கட்சியின் அனுர குமார, இவரும் விடுதலைப்புலிகளை போன்ற அல்லது தமிழ் விடுதலை இயக்கங்களை போன்ற போராளி குழுக்களைப் போல் ஒரு இயக்கமாக இருந்து அழிக்கப்பட்டு மற்றும் சிறை சென்று மீண்டும் அரசியல் நீரோட்டத்தில் புகுந்து, பலர் இணைந்து பிரிவுகள் ஏற்பட்டு உள்ள ஒரு கட்சியில் உள்ளவர்.

 இப்பொழுது இவரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக இருக்கிறார்கள். இலங்கையிலே ஒரு சுத்தமான கட்சி அதாவது முகத்திற்கு நேராக நாங்கள் இதை செய்வோம் என்று சொல்லி கொண்டு வந்தவர்கள் சொல்லி தங்களுடைய கொள்கையை இப்படித்தான் என்று வெல்லுமோ இல்லையோ எங்களுடைய கொள்கை இப்படித்தான் என்று கரடு முரடான பாதையிலே பயணிப்பவர்கள். 

 இருந்தும் சற்று பாதையை திருத்தி ஒரு திசையை நோக்கி செல்ல வேண்டிய பக்கத்திலேயே இருப்பவர்கள். இருந்தாலும் ஏழைகளுக்கு தொழிலாளர்களுக்கு ஒரு பிரச்சனைகள் என சொன்னால் தோளை கொடுப்பவர்கள். 

எந்த ஆர்ப்பாட்டத்தில் துணிந்து இறங்கி தாங்கள் சிறை சென்றாலும் பரவாயில்லை உயிர் போனாலும் பரவாயில்லை என்று ஆர்ப்பாட்டத்தின் ஊடாக மக்களுக்கான சேவைகளை மக்களுக்கு முன்னாலும் பின்னாலும் நின்று செயல்படுகின்ற ஒரு கட்சியாக ஜேவிபி கட்சி இருக்கிறது. அதற்கு நிச்சயமாக லங்கா4 ஊடகம் வாழ்த்து தெரிவிக்கிறது. 

 இருந்தாலும் கூட அவர்களுக்கான ஆதரவுகள் இன்றைய மக்கள் இவர்களை கறிவேப்பிலை போல் தங்களுடைய தேவைக்காகவும் இதுவரை காலமும் பிரயோசனப்படுத்தி கொண்டு வருகிறார்கள் என்பதை நாங்கள் கடந்த காலங்களில் பார்த்திருக்கிறோம். இது சரி தவறு என நாங்கள் தீர்ப்பு கொடுப்பதற்கோ வர முனையவிலை.

 இருந்தாலும் கூட ஜேவிபியினர் சற்று இனத்துவேசமாக ஆரம்ப காலகட்டங்களில் இருந்தாலும் கூட இப்பொழுது சற்று உலகளாவிய ரீதியிலே பரந்து இருக்கின்ற சிங்களவர்கள் தமிழர்கள் மற்றும் இஸ்லாமியர்களை சந்தித்து பேசியிருக்கிறார்கள்.

 ஏன் இவர்கள் கூட ஒரு முறை ஆட்சிக்கு வந்தால் என்ன இவர்களுக்கு ஆட்சியை கொடுத்து பார்த்தால் என்னவென்று பல கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் உலாவி வந்திருக்கிறது. அதுவும் சிங்களவர் மாத்திரமல்ல இஸ்லாமியர்கள், மற்றும் தமிழர்கள் பதிவிட்டதையும் பார்க்கக் கூடியதாக இருக்கிறது. அது எவ்வளவு வீதம் என்பதை பின்னர் பார்க்கலாம் . 

 மற்றும் சுயேட்சை கட்சிகள் இவரை ஆதரிக்கின்றனர். மறைமுகமாக இவரோடு ஒரு இரகசிய உறவை வைத்துக் கொள்வதற்கு பெரிய கட்சிகள் மறைமுகமாக சில நட்பு ரீதியான உறவுகளை வைத்திருப்பதை நாங்கள் பார்க்கக் கூடியதாக இருக்கிறது. 

 ஆனால் அதை மாத்திரம் வைத்து ஜனாதிபதி தேர்தலை நாங்கள் முன்னெடுக்க முடியாது இருந்தாலும் கூட இவர்கள் வருவார்களா இல்லையா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். இருந்தும் எங்கள் கருத்துக் கணிப்பின் ஊடாக இவர்கள் இந்த தேர்தலில் வெற்றி பெறுவது சற்று இயலாத விடையமாக உள்ளது. 

 காரணம் இவர்களது கொள்கைகளின் அடிப்படையில் இலங்கை இருக்கின்ற சூழலில் மீண்டும் வறுமைக்குள் இலங்கை சிக்க கூடிய நிலையில் இவர்களுடைய கொள்கை இருக்கிறது. இருந்தாலும் கூட இந்தியாவை எதிர்த்த இவர்கள் இப்பொழுது இந்தியாவோடும் சில நட்புறவுகளை வைத்திருப்பதற்காக அங்கு சென்று சில ஒன்று கூடல் மூலம் தங்களுடைய நட்புகளை பலப்படுத்திக் கொண்டதாக கடந்தகாலங்களில் பார்த்திருக்கின்றோம். 

 இருந்தாலும் இவர்கள் வெற்றி பெறுவார்களா இல்லையா என மக்கள் நீங்கள் இவர்களை விரும்பி ஆதரிப்பீர்களாக இருந்தால் ஜனாதிபதியாக வரக்கூடிய சாத்தியப்பாடுகள் இருக்கிறது. நீங்கள் அவருக்கு வாக்களிப்பதா அல்லது அதிகமாக வெல்லக்கூடிய ஒருவருக்கு வாக்களிப்பதா அல்லது இளைஞர்கள் மட்டத்திலே அவர்களை அரசியலுக்கு கொண்டு வர வேண்டும் என்று நினைத்தால் உங்களுடைய கையிலே தான் இருக்கிறது. 

 அரியநேந்திரன் 

images/content-image/2024/08/1723704846.jpg

 அடுத்ததாக எடுத்துக் கொள்வது அரியநேந்திரன். இவர் பொது தேர்தலில் அதாவது தமிழ் பொது வேட்பாளராக ஒரு சில உதிரி தமிழ் கட்சிகளோடு இணைந்து தமிழ் பொது வேட்பாளராக இவரை நிறுத்தி இருக்கிறார்கள் இவரைப் பொறுத்தவரையில் இவர் ஜனாதிபதியாக வெல்லப் போவதற்கான சாத்தியப்பாடுகள் இல்லை. 

 இருந்தும் தமிழ் சிவில் அமைப்புகள் இணைந்து இவரை தமிழ் மக்கள் சார்பில் நிறுத்தியிருக்கின்றார்கள். இதனை ஒரு சில தமிழ் கட்சிகள் ஆதரிக்கின்றனர். 

பல கட்சிக்கள் எதிர்க்கின்றன. இருந்தும் தமிழர்களால் முடியும் என்பதை காட்டுவதற்காகவும் சர்வதேசத்திற்கு தமிழர்கள் தனித்து செயற்பட விரும்புவதாகவும், நிற்கின்றார்கள் என்பதை காட்டுவதற்காவும் இவரை நிறுத்தியிருக்கின்றார்கள். 

 இந்த நிலையிலே நாங்கள் இந்த ஜனாதிபதி தேர்தலில் மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை நாங்கள் கூறாமல் அவர்களுடைய சில கடந்து வந்த கால விடயங்களையும் நடக்கின்ற விடயங்களையும் நடக்கப் போகின்ற ஊகங்களையும் நாங்கள் சற்று தொட்டு சென்றுள்ளோம். 

 மேலும் எங்களுடைய இந்த ஆய்வு தொடரும். மற்றும் நாங்கள் இப்பொழுது யாருக்கும் ஆதரவில்லை யார் வெல்கின்றீர்களோ சரி நாங்கள் அவர்கள் பக்கம் மக்களுக்காக அவர்கள் பக்கம் மாத்திரம் நிற்போம்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!