வன்முறையின்போது கொலை குற்றத்தில் ஈடுபட்டவர்கள் மீது விசாரணை ஆரம்பம்

#Protest #International #Bangladesh #Court
Prasu
1 year ago
வன்முறையின்போது கொலை குற்றத்தில் ஈடுபட்டவர்கள் மீது விசாரணை ஆரம்பம்

வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டிற்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் பின்னர் வன்முறையாக வெடித்தது. 

இதன்காரணமாக இடஒதுக்கீட்டை ரத்து செய்ய அரசு சம்மதம் தெரிவித்தது. என்றாலும், பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என மாணவர்கள் மீண்டும் போராட்டம் நடத்தினர். 

இந்த போராட்டமும் மிகப்பெரிய வன்முறையாக வெடித்தது. இதனால் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்தார். அவர் கடந்த 5-ந்தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். 

அதன்பிறகும் வன்முறை கட்டுக்குள் வரவில்லை. அவரின் அவாமி லீக் கட்சி தலைவர்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டன. அக்கட்சியை சேர்ந்தவர்கள், மைனாரிட்டிகள் தாக்கப்பட்டனர்.

இதனால் ஷேக் ஹசீனா பதவி விலகியதற்குப்பின் 230-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக இந்த வன்முறையில் 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா தலைமையிலான அரசு கவிழ்ந்ததால் நோபல் பரிசு வென்ற பேராசிரியர் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது. 

முகமது யூனுஸ் வங்கதேசம் மீண்டும் அமைதி நிலைக்கு திரும்ப முயற்சி மேற்கொண்டு வருகிறார்.

 இந்த நிலையில் வன்முறையின்போது கொலை குற்றத்தில் ஈடுபட்டவர்கள் சர்வதேச குற்றவியல் நீதிமன்ற சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படுவார்கள் என இடைக்கால அரசு தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4