பழிவாங்கும் அச்சுறுத்தலைக் கைவிட வேண்டும்: ஈரானுக்கு மேற்கத்திய நாடுகள் எச்சரிக்கை!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்படும் என்னும் கொக்கரிப்பை அடக்குமாறு ஈரானிடம் அமெரிக்காவும் ஐரோப்பிய நட்பு நாடுகளும் தெரிவித்து உள்ளன.
இந்நிலையில் தெஹ்ரானை எச்சரிக்கும் வகையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, பிரிட்டன் ஆகிய நாடுகளின் தலைவர்களும் கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளனர்.
“இஸ்ரேலுக்கு எதிராக ராணுவத் தாக்குதல் நடத்தப்படும் என்ற அச்சுறுத்தலைக் கைவிடுமாறு ஈரானைக் கேட்டுக்கொள்கிறோம்.
“தாக்குதல் நடத்தப்படுமானால் மத்திய கிழக்கு வட்டாரத்தில் ஏற்படக்கூடிய கடுமையான விளைவுகள் பற்றி நாங்கள் கலந்து ஆலோசித்தோம்,” என்று அந்த அறிக்கையில் தலைவர்கள் கூறியுள்ளனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே