ஜனாதிபதி வேட்பாளர் விஜயதாச ராஜபக்ஷ வேட்புமனுவில் கையெழுத்திட்டார்!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
1 year ago
ஜனாதிபதி வேட்பாளர் விஜயதாச ராஜபக்ஷ வேட்புமனுவில் கையெழுத்திட்டார்!

ஜனாதிபதி வேட்பாளர் விஜயதாச ராஜபக்ஷ இன்று (14) காலை வேட்புமனுவில் கையொப்பமிட்டுள்ளார்.  

மகாசங்கத்தினரின் ஆசீர்வாதத்திற்கு மத்தியில் விஜயதாச நாவலில் உள்ள அவரது வீட்டில் வைத்து வேட்புமனுவில் கையொப்பமிட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். 

தேசிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக, நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ அண்மையில் பிணைப் பணத்தை வைப்பிலிட்டுள்ளார்.

 ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் ஆதரவுடன் இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் அவர் போட்டியிடவுள்ளதாக ஆரம்பத்திலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆனால், சஜித் பிரேமதாசவுக்கு மைத்திரிபால சிறிசேன ஆதரவளிப்பாரா என்று ஊடகவியலாளர் ஒருவர் கேட்டதற்கு, அதற்கு பதிலளித்த விஜயதாச, "அப்படி ஒரு செய்தி உள்ளது. அவருக்கு ஆதரவு கிடைக்கும். கிடைத்தால் ஏற்றுக் கொள்வேன்” எனத் தெரிவித்துள்ளார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!