தங்கம் வென்ற அர்ஷத் நதீமை சந்தித்த பிரபல பயங்கரவாத அமைப்பின் உறுப்பினர்

#Pakistan #Player #Member #Terrorists #Olympics
Prasu
1 year ago
தங்கம் வென்ற அர்ஷத் நதீமை சந்தித்த பிரபல பயங்கரவாத அமைப்பின் உறுப்பினர்

பாரீஸ் ஒலிம்பிக்ஸ் போட்டியில் நடந்த ஈட்டியெறிதல் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் 92.97 மீட்டர் தூரத்திற்கு வீசி சாதனை படைத்ததோடு, தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். 

இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 89.45 தூரத்திற்கு வீசி 2-வது இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.

இந்நிலையில், ஐநாவால் பயங்கரவாத அமைப்பு என அறிவிக்கப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா அமைப்பை சேர்ந்த பயங்கரவாதி முகமது ஹாரிஸ் தாருடன் அர்ஷத் நதீம் இருக்கும் வீடியோ இணையத்தில் பேசு பொருளாகியுள்ளது.

மார்கசி முஸ்லீம் லீக்கின் செய்தித் தொடர்பாளர் தபிஷ் கயூம் மற்றும் அவர்களின் இளைஞர் பிரிவு தலைவர் முகமது ஹாரிஸ் தார் ஆகியோர் அர்ஷத் நதீமை அவரது இல்லத்தில் சந்தித்தனர். 

முகமது ஹாரிஸ் லஷ்கர்-இ-தொய்பாவின் நடவடிக்கைகளுக்கு நிதியுதவி செய்பவர் என்று சொல்லப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!