பிரித்தானியா வன்முறை - அமெரிக்கா சென்ற ரிஷி சுனக் மற்றும் மனைவி

#Protest #America #Britain #RishiSunak
Prasu
1 year ago
பிரித்தானியா வன்முறை - அமெரிக்கா சென்ற ரிஷி சுனக் மற்றும் மனைவி

பிரித்தானியா கலவரங்களால் பறியெரிந்துகொண்டிருக்கும் நேரத்தில், முன்னாள் பிரதமர் ரிஷி, தன் மனைவியுடன் அமெரிக்காவிலுள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தஞ்சம் புகுந்துள்ளதாக பிரித்தானிய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

பிரித்தானியாவில் கலவரமும் வன்முறையுமாக பதற்றமான சூழல் நிலவும் நேரத்தில், புலம்பெயர்தலுக்கு எதிராகவே நடவடிக்கைகள் எடுத்து வந்தவரான முன்னாள் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக், தன் மனைவி அக்‌ஷதா மூர்த்தியுடன் அமெரிக்காவிலுள்ள Beverly Hillsஇல் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றிற்குச் செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

Beverly Hillsஇலுள்ள Funke என்னும் அந்த நட்சத்திர ஹொட்டல், சினிமா நட்சத்திரங்கள் உட்பட, பிரபலங்கள் அடிக்கடி செல்லும் ஒரு ஹோட்டல் ஆகும்.

தேர்தலில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ரிஷி குடும்பத்துடன் அமெரிக்காவில் குடியமர இருப்பதாக வதந்திகள் பரவியது நினைவிருக்கலாம்.

 ஆனால், இப்போது ஐந்து வார விடுமுறைக்காக ரிஷி தன் குடும்பத்துடன் அமெரிக்கா சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!