பெண்கள் கட்டாயம் அறியவேண்டிய தகவல் - பிரசவத்துக்குப் பின்னால் மன அழுத்தம் விரிவு

#Women #stress #baby #Pregnant
Prasu
1 month ago
பெண்கள் கட்டாயம் அறியவேண்டிய தகவல் - பிரசவத்துக்குப் பின்னால் மன அழுத்தம் விரிவு

சமகாலத்தில் நிகழ்ந்த சிசுக்கொலைகள் அதன் பின்னணியில் இருக்கக்கூடிய காரணிகள் என்பன பற்றிய ஒரு ஆராய்வு இந்த பதிவாகும்.

`பிரசவத்துக்குப் பின்னர் ஏற்படும் மன அழுத்தம் என்றால் என்ன?’’

 ``பிரசவத்துக்குப் பின்னர் பெண்களுக்கு ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படும்; உடல் தோற்றத்திலும் சில மாற்றங்கள் ஏற்படலாம். இதன் காரணமாக அவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படலாம். 

இதைத்தான் `பிரசவத்துக்குப் பின்னர் ஏற்படும் மன அழுத்தம்’ (Postpartum Depression) என்கிறோம். குழந்தை பிறந்த முதல் இரண்டு வாரத்துக்குள் ஏற்படும் லேசான வகை மன அழுத்தத்தை `பேபி புளூஸ்’ (Baby Blues) என்கிறோம். 

இது யாருக்கெல்லாம் ஏற்படும்?’’

``ஏற்கெனவே மன அழுத்தம் போன்ற மன நோய்கள் இருப்பவர்கள், வீட்டில் சரியான துணை இல்லாமலிருப்பவர்கள், முன்னர் பிறந்த குழந்தைகள் இறந்து போயிருத்தல் அல்லது கரு கலைந்திருத்தல் போன்ற பாதிப்புகளை அனுபவித்தவர்களுக்கு, பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தில் உள்ள பெண்களுக்கு இந்த பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.’’

images/content-image/1722972621.jpg

``இந்த மன அழுத்தம் ஏற்படக் காரணங்கள் என்னென்ன?’’

``சில தாய்மார்கள் தன் குழந்தைக்கு உலகத்தில் வேறு யாரும் கொடுக்காத அளவுக்கு சிறந்த பராமரிப்பை கொடுப்பதை லட்சியமாக வைத்திருப்பார்கள். அதைச் செய்ய முடியாமல் போகும்போது இந்த வகை மன அழுத்தம் ஏற்படலாம்.

குழந்தை பிறந்த பின்னர் தாயின் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் இதற்கு முக்கியக் காரணம் இந்த வகை மன அழுத்தம் அளவுக்கு அதிகமாக, பிற மன நோய்களுடன் ஏற்பட்டால், அதை `குழந்தை பிறப்புக்குப் பின்னர் ஏற்படும் சைகோசிஸ்’ (Postpartum Psychosis) என்கிறோம். 

ந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் குழந்தையைக் கொல்லக்கூடிய அளவுக்கு மிகவும் ஆக்ரோஷமாக இருப்பார்கள். சில பெண்களுக்கு குழந்தை வயிற்றில் இருக்கும்போதே மன அழுத்தம் ஏற்படும். `இதைக் கர்ப்பக்கால மன அழுத்தம்’ (Prepartum Depression) என்கிறோம்.’’

``இது யாருக்கெல்லாம் ஏற்படும்?’’

``ஏற்கெனவே மன அழுத்தம் போன்ற மன நோய்கள் இருப்பவர்கள், வீட்டில் சரியான துணை இல்லாமலிருப்பவர்கள், முன்னர் பிறந்த குழந்தைகள் இறந்து போயிருத்தல் அல்லது கரு கலைந்திருத்தல் போன்ற பாதிப்புகளை அனுபவித்தவர்களுக்கு, பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தில் உள்ள பெண்களுக்கு இந்த பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.’’

images/content-image/1722972655.jpg

உடனிருப்பவர்கள் அந்த நிலைமையை உணர்ந்து துணையாக நின்று ஆறுதலாக இருந்தாலே போதும். குழந்தை பிறந்த பின்னர் ஏற்படும் மன அழுத்தம் மற்றும் இதர பிரச்னைகள் தொடர்பான தகவல்களையும், அப்போது என்ன செய்ய வேண்டும் என்பதையும் கணவரும் குடும்பத்திலுள்ள மற்றவர்களும் அறிந்து வைத்துக்கொண்டு, பெண்ணுக்கு பக்கபலமாக இருக்கத் தயாராக வேண்டும்.

இவையெல்லாம் நமக்கு எவற்றை வலியுறுத்துகிறது என்றால் கூட்டுக் குடும்ப வாழ்வு மற்றும் குடும்பத்துக்குள் ஒருவருக்கொருவரான சரியான தொடர்பு என்பன பேணப்படாவிட்டால் இன்னும் ஒரு சந்ததியை நம் கையால் நாமே அழிவுக்கு உட்படுத்துவோம் என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை.

தயவு செய்து எம் குடும்பங்களிலும் சூழலிலும் இவ்வாறான பலர் இருக்கலாம் மனிதருக்கு தேவை எல்லாம் உண்மையான நேசம் ஒன்றுதான். அது இன்றி மனிதன் மிருகமாக மாறிக் கொண்டிருக்கிறான் என்பதே மறுக்க முடியாத உண்மை!

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!