பாகிஸ்தானில் IS அமைப்பின் தளபதி உள்பட 3 பேர் கைது

#Attack #Pakistan #Terrorists
Prasu
1 year ago
பாகிஸ்தானில் IS அமைப்பின் தளபதி உள்பட 3 பேர் கைது

பாகிஸ்தானில் அதிகரித்து வரும் பயங்கரவாத தாக்குதலை கட்டுப்படுத்த அரசாங்கம் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. 

அதன்படி பைசலாபாத், ஜீலம் மற்றும் சக்வால் நகரங்களில் பயங்கரவாத அச்சுறுத்தல் அதிகமுள்ள பகுதிகளில் ராணுவ வீரர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் பஞ்சாப் மாகாணத்தில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் சதித்திட்டம் தீட்டுவதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு ராணுவ வீரர்கள் ரோந்து சென்றனர். 

அப்போது ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் தளபதி அப்துல் வஹாப் உள்பட 3 பேரை ராணுவ வீரர்கள் கைது செய்தனர். மற்ற இரண்டு ஐ.எஸ். பயங்கரவாதிகளும், சைபுல்லா மற்றும் குர்ரம் அப்பாஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

இதனிடையே அவர்களிடம் இருந்து வெடிமருந்து, துப்பாக்கி உள்ளிட்ட ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4