எத்தியோப்பியா நிலச்சரிவு - பலி எண்ணிக்கை அதிகரிப்பு

#Death #UN #Warning #Ethiopia #landslide
Prasu
1 year ago
எத்தியோப்பியா நிலச்சரிவு - பலி எண்ணிக்கை அதிகரிப்பு

தெற்கு எத்தியோப்பியாவின் கெஞ்சோ சாச்சா கோஸ்டி மாவட்டத்தின் கோபா மண்டலத்தில் கடந்த 21-ம் தேதி கனமழை பெய்தது. 

இதனால் அங்கு மண் சரிவு ஏற்பட்டது. இந்த மண் சரிவில் சிக்கி குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் உள்பட 55 பேர் பலியானதாக முதல் கட்ட தகவல் வெளியானது.

இந்நிலையில், எத்தியோப்பியாவில் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 257 ஆக அதிகரித்துள்ளது. 

தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் நடவடிக்கைகள் நடந்து வருகின்றன. மண் சரிவால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணிகளில் மீட்புக் குழு ஈடுபட்டு வருகிறது. 

காணாமல் போனவர்களை தேடி வருகிறோம் என்பதால் பலி எண்ணிக்கை 500-ஐ கடக்கலாம் என ஐ.நா. அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4