தேர்தலில் இருந்து விலகிய ஜோ பைடன்

#Election #America #President #Biden
Prasu
1 year ago
தேர்தலில் இருந்து விலகிய ஜோ பைடன்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

கட்சி மற்றும் நாட்டின் நலனை கருத்தில் கொண்டு தான் இந்த முடிவை எடுத்ததாக ஜோ பைடன் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதித் தனது சமூக வலைத்தளம் மூலம் தனது முடிவை அறிவித்துள்ளார்.

ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன், 81, போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. சிகாகோவில், அடுத்த மாதம், 19 - 22ல் நடக்கும் கட்சியின் மாநாட்டில் அவர் முறைப்படி ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என, தெரிவிக்கப்பட்டிருந்தது.

 சமீபத்தில் நடந்த தேர்தல் தொடர்பான நேரடி வாத நிகழ்ச்சியில், டொனால்ட் டிரம்ப் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல், ஜோ பைடன் திணறினார். இதைத் தொடர்ந்து, ஜனாதிபதி வேட்பாளரை மாற்ற வேண்டும் என, அவருடைய கட்சியில் பலரும் குரல் கொடுக்கத் துவங்கினர். இந்நிலையில், ஜனாதிபதி தேர்தல் போட்டியில் இருந்து, ஜோ பைடன் விலகி உள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: “ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிட மாட்டேன். எஞ்சியிருக்கும் என் பதவி காலம் முழுவதும், ஜனாதிபதியாக எனது கடமையை நிறைவேற்றுவேன். இதுவே என் கட்சிக்கும் நாட்டுக்கும் நல்லது என நம்புகிறேன்” இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

 இதனையடுத்து, ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ் போட்டியிடவுள்ளார் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கட்சியிலும் அவருக்கு ஆதரவு உள்ளதால், விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

images/content-image/2024/1721632513.jpg

 அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4