பிரபுதேவாவுடன் இணையும் ஈழத்து தமிழ் பெண் சஹானா

#TamilCinema #Women #Movie #Kollywood #Eelam
Prasu
2 years ago
பிரபுதேவாவுடன் இணையும் ஈழத்து தமிழ் பெண் சஹானா

முத்தமிழ் படைப்பகம் ஏ.ஜே பிரபாகரன் வழங்கும் பிரபுதேவா நடிக்கும் "சிங்கநல்லூர் சிக்னல்" திரைப்படத்தை எழுதி இயக்குகிறார் ஜே.எம்.ராஜா.திரைப்படத்திற்கு இசை அமைக்கிறார் யுவன் சங்கர் ராஜா.

இத்திரைப்படத்தில் ஏற்கனவே இலங்கை ரசிகர்களுக்கு பரிட்சையமான இலங்கையின் பிரபல நடிகையும், தென்னிந்திய தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலக்கியவரும், சீ தமிழ் உள்ளிட்ட தொலைக்காட்சி சீரியல்களில் நடித்தவரும், விஜய் சேதுபதியின் " றெக்க " திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு தங்கை வேடத்தில் நடித்தவருமான சீ தமிழ் புகழ் சஹானா.

மேற்படி சிங்கம்பட்டி சிக்னல் திரைப்படத்தில் பிரபல மலையாள நடிகரான சைன் டொம் சக்கோ எனும் நடிகருக்கு மனைவியாக நடிக்கவே ஒப்பந்தம் செய்யப் பட்டுள்ளார்.

 நடனப்புயல், தென்னிந்திய மைக்கேல் ஜாக்ஸன் என பெயர் பெற்ற பிரபு தேவா மற்றும் யுவன் சங்கர் ராஜா என ஒரு பிரபலமான பட்டாளமே இணைந்திருக்கும் மேற்படி திரைபப்டத்தில் இலங்கையைச் சேர்ந்த அதுவும் மலையக பின்னணி கொண்ட ஒரு நடிகைக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்திருப்பதானது முழு இலங்கைத் தமிழ் மக்களுக்கும் பெருமை சேர்ப்பதாக அமைந்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!