காசாவில் இருந்து பொதுமக்களை வெளியேற ராணுவம் எச்சரிக்கை

#Israel #War #Warning #Military #Gaza #evacuate
Prasu
1 year ago
காசாவில் இருந்து பொதுமக்களை வெளியேற ராணுவம் எச்சரிக்கை

பாலஸ்தீனத்தில் ஹமாஸ் அமைப்பினர் கட்டுப்பாட்டில் உள்ள காசாவில் கடந்த 7 மாதங்களுக்கு மேலாக இஸ்ரேல் படையினர் கடும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். 

இந்த போரில் 38 ஆயிரம் பேர் வரை பலியாகி விட்டனர். இந்த நிலையில் காசாவில் இறுதிக்கட்ட போருக்கு இஸ்ரேல் தயாராகி வருகிறது. 

கடந்த 2 வாரமாக தனது தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. இதையடுத்து காசாவில் இருந்து பொதுமக்கள் பாதுகாக்கப்பட்ட பாதை வழியாக உடனே வெளியேறுமாறு இஸ்ரேல் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

போர் நடவடிக்கையை அதிகப்படுத்த இருப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. காசாவில் தற்போது 3 லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

 இஸ்ரேல் ராணுவம் எச்ரிக்கையால் அவர்கள் பீதி அடைந்துள்ளனர். இஸ்ரேலின் இந்த நடவடிக்கை மிகவும் கவலை அளிப்பதாக ஐ.நா. தெரிவித்து இருக்கிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4