சாவகச்சேரியில் பொதுமக்கள் மீது தாக்குதல் நடாத்தும் பொலிஸார் தீவிரமடையும் போராட்டம்

#SriLanka #Police #Protest #Hospital #Chavakachcheri
Mayoorikka
1 year ago
சாவகச்சேரியில் பொதுமக்கள் மீது தாக்குதல் நடாத்தும் பொலிஸார்  தீவிரமடையும் போராட்டம்

சாவகச்சேரியில் வைத்தியசாலை வைத்திய பொறுப்பதிகாரிக்கு ஆதரவாக போராட்டத்தில் பொதுமக்களை அடித்து விரட்ட பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருவதாக போராட்டக்காரர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

 அரச நிர்வாக நடைமுறைகளுக்கு எதிராக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை வைத்திய பொறுப்பதிகாரி செயற்பட்டு வருவதாக தெரிவித்து அவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகி்ன்றன.

 இன்றைய தினம் குறித்த வைத்திய அதிகாரி மருத்துவ விடுமுறை எடுத்து வைத்தியசாலையில் மருத்துவகளுக்கு ஒதுக்கப்பட்ட விடுதியில் தங்கியுள்ளார்.

 இதேவேளை அவருக்கு இடமாற்றம் வழங்கியும் அவர் இடமாற்றத்தில் ஈடுபடாமல் வைத்தியசாலையிலேயே தங்கியிருப்பதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் சமன் பத்திரண குற்றம் சுமத்தியுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!