ஆஸ்திரேலியாவில் இடம்பெற்ற தீவிபத்து : பரிதாபமாக உயிரிழந்த குழந்தைகள்!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
1 year ago
ஆஸ்திரேலியாவில் இடம்பெற்ற தீவிபத்து : பரிதாபமாக உயிரிழந்த குழந்தைகள்!

ஆஸ்திரேலியாவின் சிட்னியில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். 

 இந்த சம்பவத்தை ஒரு கொலையாக கருதி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 

மேற்கு சிட்னியில் உள்ள லலோர் பார்க் என்ற பகுதியில் இன்று (07.07) அதிகாலை 1 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அங்கு இரண்டு மற்றும் நான்கு வயதுடைய இரண்டு சிறுவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதுடன், தீயை அணைத்த பின்னர் 10 மாத பெண் குழந்தை சடலமாக மீட்கப்பட்டுள்ளது.  

தீயை கட்டுப்படுத்துவதற்கு இடையூறு விளைவித்த 28 வயதுடைய நபர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, தீயினால் ஏற்பட்ட காயங்களுக்கு சிகிச்சைக்காக பொலிஸ் பாதுகாப்பில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

மேலும் 6 முதல் 11 வயதுக்குட்பட்ட 4 குழந்தைகளும் 28 வயதான தாயும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குடும்ப தகராறு காரணமாக இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4