வரி அடையாள இலக்கம் பெற்றவர்களுக்கான விசேட அறிவிப்பு!

#SriLanka #Tax
Mayoorikka
1 year ago
வரி அடையாள இலக்கம் பெற்றவர்களுக்கான விசேட அறிவிப்பு!

வரி செலுத்துவோர் அடையாள இலக்கம் (TIN) பெற்றவர்கள் வரி செலுத்துமாறு உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திடம் இருந்து கடிதங்கள் அல்லது குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டுள்ளன.

 எனினும், அவர்களின் மாதாந்த வருமானம் ஒரு இலட்சத்தினை தாண்டாது இருப்பின் வரி செலுத்த தேவையில்லை என்று நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

 இது தொடர்பில் அருகில் உள்ள உள்நாட்டு இறைவரி திணைக்கள பிராந்திய அலுவலகத்திற்கு அறிவிக்க முடியும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார். இதுவரை 23 இலட்சம் பேர் TIN நம்பர் பெற்றுள்ளதுடன், ஜூன் மாதத்தில் மட்டும் 13 இலட்சம் பேர் பெற்றுள்ளனர்.

 இந்த நிலையில், ஜூலை மாத இறுதிக்குள் டின் எண்கள் வழங்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை 73 இலட்சமாக உயர்த்தலாம் என அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!